தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., சேர்க்கை நிறுத்தம்

 ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., சேர்க்கை நிறுத்தம்

 ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., சேர்க்கை நிறுத்தம்


ADDED : ஏப் 09, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகளில், ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை, வரும் கல்வியாண்டில் இருந்து நிறுத்தப்படுகிறது' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பல்கலை பதிவாளர் ராஜசேகரன், அனைத்து கல்லுாரி முதல்வர்கள், தாளாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய ஆசிரியர் கல்வி குழுமம், திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., பட்டப்படிப்புகள், 2026 - 27ம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது.

எந்த ஒரு கல்வி நிறுவனமும், புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதி கிடையாது. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையுடன், இணைப்பு அங்கீகாரம் பெற்ற, கல்வியியல் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டு முதல், நான்காண்டு பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ.,- பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கை செய்ய வழிவகை இல்லை. விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடத்தினால், பல்கலை எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us