ADDED : அக் 25, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ'வில், பட்டதாரிகள் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, https://careers.unesco.org என்ற இணையதளம் வாயிலாக, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம். 20 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில், எழுத்து மற்றும் பேசும் திறனுடன் பட்ட மேற்படிப்பு, முனைவர் அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினி தொடர்பான திறன்களும், குழு நிர்வாக பண்பும் அவசியம்.
ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை, யுனெஸ்கோவின் உத்தரவுகள், திட்டங்கள், தொழில்நுட்ப திறன்கள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி மற்றும் பயணங்களுக்கு உதவித்தொகையோ, பயிற்சி முடித்தபின் பணி வாய்ப்பையோ யுனெஸ்கோ வழங்காது.

