ADDED : ஜூலை 23, 2025 12:15 AM
சென்னை:நாட்டின் நம்பிக்கையான, நகை பிராண்டான தனிஷ்க், புதிதாக, தனிஷ்க் வைரங்கள் நிபுணத்துவ மையத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் வழியே, வெளிப்படையாக கடையிலேயே வைர மதிப்பீட்டு செயல்முறையை, அறிமுகம் செய்வதன் வாயிலாக, வாடிக்கையாளரின் நீண்டகால தேவையை நிவர்த்தி செய்கிறது.
இது குறித்து, தனிஷ்க் தலைமை செயல் அதிகாரி அஜோய் சாவ்லா கூறியதாவது:
தனிஷ்க் வைரங்கள் நிபுணத்துவ மையத்தை துவக்குவதன் வாயிலாக, இயற்கை வைர சில்லரை விற்பனையில், ஒரு புதிய தரத்தை அமைப்பதே எங்கள் நோக்கம்.
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வைரத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், கைவினைத்திறன், பிரகாசம் முதல் தோற்றம், நம்பகத்தன்மை வரை, புரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த முயற்சி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணர் வழிகாட்டுதல் வாயிலாக, நிகழ் நேர தகவல்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி பீர்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் அமித் பிரதிஹாரி கூறியதாவது:
இயற்கை வைரத்தை தேர்ந்தெடுப்பது என்பது, ஆழமான தனிப்பட்ட உணர்வுப்பூர்வ அனுபவம்.
பீர்ஸ் குழுமத்தில், உலகத்தரம் வாய்ந்த வைர நிபுணத்துவத்துடன், தனிஷ்க் கடைகளை மேம்படுத்தவும், ஒவ்வொரு இயற்கை வைரத்தையும் அங்கீகரிக்கும், அதிநவீன தொழில்நுட்பத்துடன், கடையில் அனுபவத்தை பெறுவதை உறுதி செய்வதற்கும், நம்பிக்கை மற்றும் வெளிப்படை தன்மையை வளர்ப்பதற்கும் உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

