ADDED : டிச 10, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, 500 கோடி ரூபாய் செலவில், இரண்டு மாதங்களில் நடத்த முடியும். ஒரே மாதத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடித்தது போல, அதுவும் எளிதான ஒன்றுதான். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியதால், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்து, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள்கூட, அவர்களின் புதிய தொழிற்சாலையை இங்கு தொடங்க முன்வருவதில்லை. இதை பற்றி, முதல்வருக்கு கவலை இல்லை.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

