ADDED : ஜூலை 21, 2011 05:59 PM
சென்னை: போச்சம்பள்ளி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பி., திருநாவுக்கரசு உட்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு முதன்மை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாநகர், சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த செந்தில்குமார் மாற்றப்பட்டு, கோவை மாநகர் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., சத்தியப்பிரியா, சேலம் மாநகர் சட்டம்- ஒழுங்கு, துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏழாவது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருந்த திருநாவுக்கரசு, மதுரை மாநகர் சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, எஸ்.பி., துரைராஜ், சிறப்பு பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., சம்பத்குமார், கியூ பிரிவு எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.