உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 15, 2026 02:38 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சுப்பராயன் அறிக்கை:
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியப் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது, ஈரானுடன் வர்த்தகம் செய்தால், 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஈரானுக்கு நீண்ட நெடிய காலமாக விவசாய விளை பொருட்களான பாசுமதி அரிசி, தேயிலை, சர்க்கரை, ஆபரணங்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த வர்த்தகத்தை சீர்குலைப்பதற்காகவே, அமெரிக்கா சதி செய்கிறது. இதை கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
