தீபாவளியால் திணறும் ஐஆர்சிடிசி இணையதளம்; ரயில் டிக்கெட் முன்பதிவு பாதிப்பு
தீபாவளியால் திணறும் ஐஆர்சிடிசி இணையதளம்; ரயில் டிக்கெட் முன்பதிவு பாதிப்பு
ADDED : அக் 17, 2025 11:31 AM

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.
தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை (அக்.,20) கொண்டாடப்பட இருக்கிறது. நாளை (அக்.,18) மற்றும் நாளை மறுநாள் (அக்.,19) சனி, ஞாயிறு என்பதால், தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் அனுபவிக்க, முன்கூட்டியே ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், நாளைக்கான ரயில் டிக்கெட்டுகளை தட்கல் முறையில் முன்பதிவு செய்ய, ஒரே சமயத்தில் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தியுள்ளனர். இதனால், இணையதளம் முடங்கியது. இதனால், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்த ஒரு மணிநேரத்திற்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.