தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜாமின் கிடைக்குமா? செந்தில் பாலாஜி மனுவில் இன்று தீர்ப்பு

ஜாமின் கிடைக்குமா? செந்தில் பாலாஜி மனுவில் இன்று தீர்ப்பு

ஜாமின் கிடைக்குமா? செந்தில் பாலாஜி மனுவில் இன்று தீர்ப்பு


ADDED : பிப் 28, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று(பிப்.,28) வழங்குகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், வழக்கறிஞர்கள் மா.கவுதமன், பரணிக்குமார் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஜாமின் வழக்கில் இன்று காலை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us