உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 29, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: ‘தமிழகத்தில் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
‘மிட்ஸ்’ எனும் சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசியர் கலையரசனை, நேற்று காலை, 5:00 மணிக்கு, அவரது வீட்டிலிருந்து, எவ்வித முகாந்திரமும் இல்லாமல், சீருடை அணியாத போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது. நள்ளிரவு கைது; விடியற்காலை கைது என்பதெல்லாம், காவல் துறையின் ராஜ்யம் நடக்கிறதோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
புகார் இருந்தால், முறையாக வழக்குப் பதிவு செய்து, சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை, இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
