அரசியல் கேள்வியா; ஆளை விடுங்க சாமி: நழுவி ஓடினார் ரஜினி
அரசியல் கேள்வியா; ஆளை விடுங்க சாமி: நழுவி ஓடினார் ரஜினி
ADDED : செப் 20, 2024 11:26 AM

சென்னை: '' அரசியல் சார்ந்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளேன்'', என நடிகர் ரஜினி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தி.மு.க., இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி விரைவில் துணை முதல்வர் ஆவார் என செய்தி வெளியான வண்ணம் உள்ளன. விரைவில் அவர் துணை முதல்வர் ஆவார் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். தி.மு.க.,வினர் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயவாடாவில் கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். அப்போது நிருபர்கள் உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ரஜினி கூறியதாவது: 'என்னிடம் அரசியல் சார்ந்த கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளேன். வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. பாடல் வெளியீட்டு விழாவில் யார் கலந்து கொள்வார்கள் என தெரியாது'. இவ்வாறு அவர் கூறினார்.