நடைமுறைக்கு சாத்தியமா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? வாசகர்களே எழுதுங்கள்!
நடைமுறைக்கு சாத்தியமா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? வாசகர்களே எழுதுங்கள்!
UPDATED : மார் 20, 2024 01:39 PM
ADDED : மார் 20, 2024 12:55 PM

சென்னை: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத பல வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக வாசகர்களே! தங்கள் கருத்துகளை தினமலர் இணையதளம் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்..
லோக்சபா தேர்தலுக்கான திமுக.,வின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 20) வெளியிடப்பட்டது. ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது திமுக,.அதில் பல மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட அறிவிப்புகளாக உள்ளன.
குறிப்பாக சில அறிவிப்புகள் ஒருபோதும் சாத்தியமே இல்லாதவையும் இடம்பெற்றுள்ளன. அதாவது, நாடு முழுவதும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை, நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கல், இந்தியா முழுவதும் நான் முதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டம் என்பன போன்ற பல வாக்குறுதிகளும் அடங்கும்.
இதுபோன்ற திட்டங்கள் சாத்தியமில்லாதவை. இவற்றை அமல்படுத்த வேண்டுமென்றால் கோடான கோடி நிதி வேண்டும். அவ்வளவு பணம் நமது நாட்டிடம் இருக்கிறதா என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது பற்றி வாசகர்களே உங்கள் கருத்துகளை தினமலர் இணையதளத்தில் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்.

