ADDED : ஆக 22, 2025 02:25 AM
புல் அவுட்:
சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்துக்கு என்ன செய்தார் என கேட்கும் தி.மு.க., - எம்.பி., கனிமொழி, 'மத்திய அரசு நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துாரை' ஆதரித்து வெளிநாடுகளுக்கு இந்திய அரசு பிரதிநிதியாக சென்றபோது, 'தமிழுக்கும், தமிழருக்கும் பா.ஜ., என்ன செய்தது?' என ஏன் கேட்கவில்லை?
திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல் என்பது ஆங்கில சொல். இது இரண்டையும் இணைத்து வைத்துதான், பித்தலாட்டம் செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளனர். அதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதை மனதார வரவேற்கிறேன். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, தமிழக அரசு போதையை ஒழிப்பேன் என கூறினால், யாரும் அதை நம்ப வேண்டுமா?
குடிசை ஒழிப்பு என்று கூறி, குடிசைகளை கொளுத்தி விடுவது மாதிரி, மது ஒழிப்பு எனக் கூறி, மதுவை குடித்து விட்டுத்தான் ஒழிக்க முடியுமா?
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்