தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரை கலைஞர் நுாலகத்தில் அகல்விளக்கு பதிப்பக நுால்களா? அதிகாரிகள் ஆய்வு

மதுரை கலைஞர் நுாலகத்தில் அகல்விளக்கு பதிப்பக நுால்களா? அதிகாரிகள் ஆய்வு

மதுரை கலைஞர் நுாலகத்தில் அகல்விளக்கு பதிப்பக நுால்களா? அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 07, 2026 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 08:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: கோவை ஈவெரா நூலகத்திற்கு சர்ச்சைக்குரிய நுால்களை விநியோகித்த அகல்விளக்கு பதிப்பாளர் மோகன், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்திற்கும் நுால்களை விநியோகித்ததாக தெரிவித்திருந்தார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மதுரை நுாலகத்தில் அப்பதிப்பக நுால்கள் இல்லை என தெரியவந்தது.

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சென்னை கன்னிமரா நுாலகம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்திற்கும் அனுப்பியதாக தெரிவித்தார். அந்த நுால்களில் தவறான தகவல்கள், போலி எழுத்தாளர்கள் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவையில் அந்த நுால்கள் அகற்றப்பட்ட நிலையில், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நுாலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொது நுாலக இயக்ககத்திற்கு உட்பட்ட வெளிப்படையான புத்தக கொள்முதல் போர்ட்டல் மூலமாகவே நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அப்போர்டலில் பதியும் முன் பதிப்பாளர்கள், கலைஞர் நுாலகம், கன்னிமரா நுாலகம், அண்ணா நுாலகம், கொல்கட்டா தேசிய நுாலகம் உள்ளிட்ட நுாலகங்களுக்கு தங்கள் பதிப்பக புத்தகங்களின் ஒரு பிரதியை அனுப்பி பெறப்பட்ட ரசீதை வைத்தே அப்போர்ட்டலில் பதிய முடியும். பரிசீலனைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அவ்வாறு பதிவு செய்த புத்தகங்களை நுாலகர், வாசகர்கள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட புத்தக பட்டியல் பொது நுாலக இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்படும்.

அதில் உள்ள புத்தகங்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் படிக்க ரேக்கில் வைக்கப்படும். தேர்வு செய்யப்படாத புத்தகங்கள் தவிர்க்கப்படும். கலைஞர் நுாற்றாண்டு நுாலக புத்தக பட்டியலில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்கள் இல்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us