தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்
தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்
ADDED : ஜூன் 24, 2025 02:41 PM

சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? மாநிலத்தில் என்ன நடக்கிறது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
ரேஷன் கடைகளுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்தமைக்கு வழங்க வேண்டிய ரூ.141 கோடியை விடுவிக்கக்கோரி தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 24) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:
* தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? மாநிலத்தில் என்ன நடக்கிறது? இது அரசை நடத்தும் வழியல்ல.
* மாநில அரசு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
* நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டாம் என அரசு முடிவு செய்துவிட்டதா?
* இது குறித்து தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தொகையை வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
* இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.