ADDED : அக் 04, 2025 04:22 AM

சென்னை : காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் பேட்டி:
கரூர் துயரச் சம்பவத்தில், முதல் குற்றவாளி பொதுமக்கள் தான். விஜய் என்ன தேவதுாதரா? எல்லாரையும் போல இரண்டு கண், ஒரு மூக்கு கொண்ட சாதாரண மனிதன் தானே. பல படங்களில் அவரை பார்த்திருப்பர். அவரை பார்க்க வேண்டும் என்றால், 'டிவி' நேரடி ஒளிபரப்பில் பார்த்திருக்கலாமே.
பெண்களும், கைக்குழந்தைகளுடன் விஜய் பிரசார கூட்டத்துக்கு சென்றது, அரசியல் பேச்சு கேட்க அல்ல. விஜயை பார்க்கத்தான். விஜய் என்ற காட்சிப்பொருளை கண்டு பரவசமடைய வேண்டும் என, விபரீதத்தைத் தேடிச்சென்ற, பொதுமக்கள் தான் குற்றவாளிகள்.
இரண்டாவது குற்றவாளி விஜய். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களை ஏன் பார்க்க செல்லவில்லை? விஜய், கூட்டத்துக்கு தாமதமாக வந்தது தவறு. எனவே, இரண்டாவது குற்றவாளி விஜய்.
மூன்றாவது குற்றவாளி, போலீஸ். முதல்வர் ஸ்டாலினுக்கு அதே கரூரில் பெரிய இடம் கொடுக்கப்பட்டது; விஜய்க்கு முட்டுச்சந்து கொடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க., நிர்வாகிகள் கேட்ட இடத்தை, போலீஸ் மறுத்துள்ளது. காவல் துறை திட்டமிட்டு சதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.