UPDATED : ஏப் 09, 2024 10:26 PM
ADDED : ஏப் 09, 2024 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்ரபம் லோக்சபா தொகுதி வி.சி.க, வேட்பாளர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சிதம்பரம் புறவழிச்சாலையில் திருமாவளவன் வீடு உள்ளது. இங்கு தங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். . ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து திரும்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

