அங்கீகாரம் கொடுத்தது மிகப்பெரிய பாக்கியம்: நடிகர் அஜித் நெகிழ்ச்சி
அங்கீகாரம் கொடுத்தது மிகப்பெரிய பாக்கியம்: நடிகர் அஜித் நெகிழ்ச்சி
ADDED : ஜன 25, 2025 10:29 PM

சென்னை: மத்திய அரசு எனக்கு விருது அறிவித்துள்ளதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவித்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு அங்கீகாரத்தை இந்திய அரசு எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் என நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்னை உருவாக்கிய திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுக்களூக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. என்னுடைய ரசிகர்கள் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அஜித்குமார் அந்த கடிதத்தில் நன்றி கூறியுள்ளார்.
பத்ம பூஷன் விருது வென்ற அஜித் குமாருக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.