ADDED : ஏப் 02, 2025 07:54 PM
தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. அங்கு, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசு பள்ளி, கல்லுாரிகளில், துாய்மையற்ற கழிப்பறைகள், பராமரிப்பற்ற குடிநீர் தொட்டி பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு நோய்கள் பரவி, அடிக்கடி உடல்நிலை சீர்கேடு ஏற்படுகிறது. தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர், வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
தங்களால் தான் தமிழகம் முன்னேறியது என பெருமை பேசும், திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிப்பறை, துாய குடிநீர் வசதிக்கூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது. தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால், நா.த.க., சார்பில், அறப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்

