குடும்பத்திற்காக தொழில் கொள்கை தி.மு.க., அரசு வெளியிடுவது அவமானம்: அண்ணாமலை, தினகரன் கண்டனம்
குடும்பத்திற்காக தொழில் கொள்கை தி.மு.க., அரசு வெளியிடுவது அவமானம்: அண்ணாமலை, தினகரன் கண்டனம்
UPDATED : ஏப் 19, 2025 03:55 AM
ADDED : ஏப் 18, 2025 07:38 PM

சென்னை:'குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில், ஒரு தொழில் கொள்கையை, தி.மு.க., அரசு வெளியிடுவது அவமானம்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் மருமகன், விண்வெளி தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை துவக்கியதில் இருந்தே, விண்வெளி தொழில் கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 2024 ஜூலை 22ல் துவக்கப்பட்ட, 'வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி.,' நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார்.
இந்நிறுவனம், 20 சதவீத மூலதன மானியத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விண்வெளி தொழில் கொள்கையை, கோபாலபுரம் குடும்ப தொழில் கொள்கை என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
முதலீடுகள் இல்லாததால், மாநிலம் தவித்து வருகிறது. புதிய முதலீடுகளுக்கு போராடி வருகிறது. சர்வாதிகார அரசு, அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில், ஒரு தொழில் துறை கொள்கையை வெளியிடுகிறது. இது அவமானம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

