தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் நிதி வசூலிப்பது சிரமம்: வைகோ

 தேர்தல் நிதி வசூலிப்பது சிரமம்: வைகோ

 தேர்தல் நிதி வசூலிப்பது சிரமம்: வைகோ


ADDED : பிப் 19, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நேற்று முன்தினம் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அளித்த பேட்டி:

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை; யாரோ இயக்குகின்றனர். அதனால், ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

அதை முன்கூட்டியே அறிந்து தான், திருச்சியில் தனி சின்னத்தில் போட்டியிட்டோம். அதனால் தான், ம.தி.மு.க.,வை காப்பாற்றினோம்.

தேர்தல் நேரத்தில் நான் யாருக்கெல்லாம் உதவினேனோ, அவர்கள் தான் 'ம.தி.மு.க.,வை அழித்து விடலாம்' என எண்ணி, என்னை பற்றி அவதுாறு பரப்பினர். ம.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.

தேர்தல் நிதி வசூலிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு காலத்தில் தி.மு.க.,வுக்கு தேர்தல் நிதி திரட்டும்போது, நான் பட்ட சிரமம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us