ADDED : அக் 24, 2024 02:24 AM
தேனி:'தீபாவளி முன்பணம் பெற விரும்பும் அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்,' அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் சம்பளம் உள்ளிட்ட கணக்குகள் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற சாப்ட்வேர் மூலம் கையாளப்படுகிறது. இதற்கேற்ப 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலியும் கடந்த ஜனவரி முதல் அரசுத்துறைகளில் படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்தன.
இந்நிலையில் தீபாவளி முன்பணம் கேட்டு விண்ணப்பிப்போர் களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்களிடமும் கருவூல கணக்குத்துறை அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துப்பூர்வ கடிதம் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

