வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை; முதல்வர் ஸ்டாலின் கறார்
வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை; முதல்வர் ஸ்டாலின் கறார்
UPDATED : அக் 17, 2024 02:19 PM
ADDED : அக் 17, 2024 01:13 PM

சென்னை: 'வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் கனமழை பாதிப்பு பகுதிகளை மூன்றாவது நாளாக கொளத்தூர் தொகுதியில் வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியின் பணிகள் மக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு உள்ளது. மக்கள் தி.மு.க., அரசை பாராட்டுவதை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர். பாராட்டுகளை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர். மழை வெள்ளத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.
பாராட்டுகள்
இதை அரசியலாக்கி வியாபார பொருளாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மக்கள் பாராட்டும் வகையில் பெருமைப்படும் வகையில் அதிகாரிகள் ஊழியர்கள் பணியாற்றினர். மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டுகள்.
சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டுவதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை. வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்துவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
![]() |
பிரியாணி வழங்கினார் ஸ்டாலின்
மாநகராட்சி
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து
முதல்வர் உணவருந்தினார். தூய்மைப் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி,
பொரித்த மீன் மற்றும் சிக்கன் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


