ADDED : அக் 18, 2024 08:04 AM

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(அக்.,18) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வட மாவட்டங்களின் மேல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக,காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. கோயம்பேடு, அம்பத்தூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது.
குறிப்பாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.