ADDED : செப் 08, 2025 01:56 AM

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் மணிகண்டனின் அறிக்கை:
அ.தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருந்தவர் செங்கோட்டையன். அவரை கட்சியில் இருந்து நீக்க, எவருக்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஏனென்றால், செங்கோட்டையனையும், அ.தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. செங்கோட்டையன் வழியில் அ.தி.மு.க. ஒன்றுபட, அனைவரும் தங்கள் குரலை உயர்த்த வேண்டும்.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது அவசியம் என்ற சசிகலா, செங்கோட்டையன் வழியில் இனி செயல்படுவோம். வரும் சட்டசபை தேர்தலில், சுயநலம் கருதாமல், அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னணியில் துாண்டுதல்
செங்கோட்டையனுக்குள் ஓடக்கூடிய ரத்தம் அ.தி.மு.க., ரத்தம் என ஒருவர் பேசியுள்ளார். ரத்தத்தில், ஏ, ஓ, வகைகள் இருக்கலாம். அ.தி.மு.க., ரத்தம் என ஒன்று கிடையாது. ரத்த வகையைச் சொல்பவர்கள் தான், செங்கோட்டையன் பின்னணியில் இருந்து துாண்டுகின்றனர். கட்சியில் இணைத்தால் போதும்; பதவி எதுவும் வேண்டாம் என பன்னீர்செல்வம் சொல்வது, தன் மீது மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்துவதற்காகவே. செங்கோட்டையன் டில்லிக்கு சென்றார்; பலருடன் பேசி திரும்பினார். இப்போது, பொதுச்செயலருக்கு கெடு விதிக்கிறார். இதெல்லாம் செங்கோட்டையனுக்கு நல்லதல்ல.
- தளவாய் சுந்தரம், அமைப்பு செயலர், அ.தி.மு.க.,