'சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியம்' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
'சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியம்' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
ADDED : நவ 21, 2024 01:14 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், நேற்று செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, 2026 தேர்தலில், தி.மு.க.,விற்கு எந்தவித பின்னடைவும் ஏற்படுத்தாது. அப்பகுதியில் உள்ள மக்கள், நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் முறையான வாதங்களை எடுத்துரைத்து தடுத்து நிறுத்துவோம். மேல்முறையீட்டுக்கு எப்போது செல்வது என்று முதல்வர் முடிவு செய்வார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த மர்மமும் கிடையாது; மர்மம் இருந்தால் தானே முடிச்சை அவிழ்ப்பதற்கு! தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
அதற்காக தான் திருமாவளவன் நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். ஆனால், ஒரு மாநிலத்திற்கு மட்டும் பூரண மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்த முடியாது.
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வர வேண்டும். பூரண மதுவிலக்கு வேண்டும் என்று ஒரு சிலரும், வேண்டாம் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். இருவரையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

