ADDED : செப் 30, 2026 07:33 AM

திருப்பூர் : ''தி.மு.க.வின் ஆதரவோடு அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது கம்யூனிஸ்ட்கள் தான்,'' என, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் கூறினார்.
இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, நேற்று சண்முகம் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், எந்த விதமான உறுதிமொழிகளும் அளிக்கப்படாமல் தான், அ.தி.மு.க.,வில் இருந்து அந்த இரண்டு பெண் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தார்களா. இந்த கேள்விக்கு இன்று வரை முதல்வரோ, அமைச்சர்களோ யாரும் பதில் தரவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும், அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., ஆதரவளித்து ஆட்சி அமைக்க முயற்சித்தது என்று தான் கூறுகின்றனர்.
தி.மு.க.வின் ஆதரவோடு அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது கம்யூனிஸ்ட்கள் தான். அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தான் கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போராடினோம். இவ்வாறு அவர் பேசினார்.
