'மூன்றாண்டில் மதுக்கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும்': பா.ம.க., அன்புமணி கோரிக்கை
'மூன்றாண்டில் மதுக்கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும்': பா.ம.க., அன்புமணி கோரிக்கை
ADDED : செப் 30, 2026 07:31 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், கடந்த ஆண்டு பெண்களின் உயிரிழப்பை விட, ஆண்களின் உயிரிழப்பு 1.10 லட்சம் அதிகமாக உள்ளது. ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்படும் காரணங்களில், பெரும்பாலானவை மது பழக்கத்துடன் தொடர்புடையவை.
மது பழக்கத்தால் விபத்து, தற்கொலை, இதயம் பிரச்னை, சிறுநீரக பாதிப்பு போன்றவை நிகழ்கின்றன. மது வணிகத்தால், அரசுக்கு ஆண்டுதோறும் 60,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், அதனால் ஏற்படும் இழப்பு மிக அதிகம். எனவே, ஆண்டுக்கு 1,000 கடைகள் என, மூன்றாண்டுகளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றோர் அறிக்கையில், 'நெல்லையில் இரட்டை கொலை, சென்னையில் குடும்பத்தினர் முன் இளைஞர் படுகொலை என சமீப காலமாக கொலை அதிகரிப்பதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது' என அன்புமணி கூறியுள்ளார்.
