உள்ளடக்கத்திற்கு செல்ல

தி.மு.க., - அ.தி.மு.க., தான் இடைத்தேர்தலுக்கு காரணம்
தி.மு.க., - அ.தி.மு.க., தான் இடைத்தேர்தலுக்கு காரணம்
ADDED : செப் 30, 2026 07:31 AM

அ நிறம் | அளவு
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நடத்திய குதிரை பேரம் தான் இடைத்தேர்தலுக்கு காரணம். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க.,வும், தி.மு.க,வும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. இது, தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் தான், தி.மு.க., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகியது.
இடைத்தேர்தலை திணித்தது தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான். அவர்கள் நடத்திய குதிரை பேரம் தான் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவுக்கு காரணமாக அமைந்தது.
தி.மு.க.,வினர் பேரத்தில் ஈடுபட அங்குள்ள, 'பவர் சென்டர்' தான் காரணம். அது அந்த கட்சிக்கும் கேடு; தமிழகத்துக்கும் கேடு. காங்., அல்லாத மூன்றாவது அணியை தி.மு.க., உருவாக்க முயற்சித்தால், அது, பா.ஜ.,வுக்கே சாதகமாக அமையும்.
- துரை வைகோ, முதன்மைச் செயலர், ம.தி.மு.க.,
