ADDED : செப் 30, 2026 07:30 AM

ஆதிதிராவிடர் நலத்துறை என இருந்ததை, 'சமூக நீதித்துறை' என, த.வெ.க., அரசு முறையாக பெயரிட்டுள்ளது. ஆனால், சட்டசபையில் தாக்கல் செய்த, சமூக நீதித்துறை மானிய கோரிக்கை ஏடுகளில், 'பட்டியல் பிரிவு மக்கள்' என குறிப்பிடாமல், 'ஆதிதிராவிடர்' என, அந்த துறை அமைச்சரால் உள்நோக்கத்தோடு குறிப்பிட்டதை கண்டிக்கிறோம்.
கிராமங்கள், தெருக்களின் பெயர்களில், ஜாதி அடையாளங்களை நீக்க, கலெக்டர்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஜாதி ஒழிப்பு பேசும் அந்த ஆணையம், குறிப்பிட்ட ஜாதி பெயரில் இயங்குவது பொருத்தமற்றது. ஆணையம் பெயரில் உள்ள, 'ஆதிதிராவிடர்' எனும் குறிப்பிட்ட ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். அரசின் கடித பரிமாற்றங்கள், ஆணைகளில், ஆதிதிராவிடர் என ஜாதிப் பெயர் இடம்பெறாமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி
