'முதன்முதலில் 'நீட்' குறித்து எச்சரித்தது தி.மு.க., தான்'
'முதன்முதலில் 'நீட்' குறித்து எச்சரித்தது தி.மு.க., தான்'
ADDED : ஜூலை 23, 2026 06:12 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: டில்லியில் நடக்கும் மாணவர் போராட்டம், நாடு முழுதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வு, பெரும் அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக, முதன் முதலில் எச்சரித்த இயக்கம், தி.மு.க., தான்.
அதனால் தான், நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதை தி.மு.க., எதிர்த்து வருகிறது. முதல் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு வித்திட்ட தமிழகத்தின் ஒரே கோரிக்கை, 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்பது தான்.
மற்ற எந்த கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே, மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டங்களின் மையப்பொருளாக அமைய வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே, சிக்கல்கள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வை அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
