ADDED : ஜூலை 09, 2026 12:35 AM

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் வாட்டும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில், சில இடங்களில் இன்று, மணிக்கு 50 - 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை, இயல்பான வெப்ப நிலையை விட, 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்.
அதேசமயம், ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில், நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கடலுார், பரங்கிப்பேட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களிலும், புதுச்சேரி, மற்றும் காரைக்காலிலும், வெயில் சதமடித்தது.
இங்கு, 38 டிகிரி செல்சியசுக்கு மேல், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
