ADDED : ஜூலை 09, 2026 12:36 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,400 ரூபாய்க்கும், சவரன், 1,07,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 13,330 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 1,06,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலை, 5:17 மணிக்கு, தங்கம் மீண்டும் கிராமுக்கு, 130 ரூபாய் குறைந்து, 13,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,040 ரூபாய் சரிவடைந்து, 1,05,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
மாலை, 5:48 மணிக்கு தங்கம் விலை கிராமுக்கு, 50 உயர்ந்து, 13,250 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,06,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இதையடுத்து, நேற்று தங்கம் சவரனுக்கு, 1,200 ரூபாய் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
