உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 03, 2026 01:03 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங் களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். இதே வானிலை நாளையும் தொடரும்.
அதேசமயம், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
