sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

/

நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!

19


ADDED : ஜூலை 16, 2025 01:41 PM

Google News

19

ADDED : ஜூலை 16, 2025 01:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: ''கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை தாங்குகிறது. நான் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கலந்துரையாடினார். அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன; செங்கரும்பு விற்பனைக்கு வந்ததற்கு அ.தி.மு.க., அரசே காரணம். ஆன்லைன் நெல் கொள்முதலில் நீடிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்களை இ.பி.எஸ்., சந்தித்தார். அப்போது, நிருபர்கள் கேள்விக்கு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

கேள்வி: அமித்ஷா வந்து எப்பொழுதும் கூட்டணி ஆட்சி என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

இ.பி.எஸ்., பதில்: கூட்டணி ஆட்சி இல்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இப்பொழுது நல்லா புரிந்து கொள்ளுங்கள். இந்த கட்சிக்கு யார் கூட்டணி தலைமை தாங்குகிறது. நீங்களே சொல்லுங்கள், அப்புறம் நான் எடுக்கிற முடிவு தானே, அப்பொழுது யார் முதல்வர் ஆகிறார்கள். யார் ஆட்சி அமைக்கிறது, சொல்லுங்கள்.

நீங்கள் சொல்லுங்கள். உங்கள் முடிவை நான் கேட்கிறேன். நீங்கள் எங்களை கேள்வி கேட்டீர்களா? நாங்கள் இருவரும் அமர்ந்து தெளிவுப்படுத்திவிட்டோம்.


அதுல, இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை தாங்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். அதில் இ.பி.எஸ்., முதல்வர். இன்னும் உங்களுக்கு என்ன தெளிவுப்படுத்த வேண்டும்.

வேண்டும் என்றோ தோண்டி, தோண்டி விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேண்டும் என்று, கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்று, நினைப்பதால் ஒன்றும் முடியாது. தெளிவான கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும். தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

பந்தியில் பா.ம.க., இல்லை!


நிருபர்: கூட்டணிக்கு வந்தால் மந்திரி சபையில் இடம் கேட்பேன் என்கிறாரே அன்புமணி?

இ.பி.எஸ் பதில்: சார், அவங்க வந்தா பாத்துக்கலாம் விடுங்க. ஏங்க, பந்தியிலயே உக்கார வைக்கல, இலை ஓட்டை என்றால் என்ன பண்ணுவது?






      Dinamalar
      Follow us