காஷ்மீரில் ராணுவ போர்ட்டர்கள் பணிக்கு ஆர்வமுடன் குவிந்த இளைஞர்கள்
காஷ்மீரில் ராணுவ போர்ட்டர்கள் பணிக்கு ஆர்வமுடன் குவிந்த இளைஞர்கள்
ADDED : ஆக 03, 2025 10:45 PM

பூஞ்ச்: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் மன்தெர் பட்டாலியன் சார்பில் போர்ட்டர் பணிக்கு ஆள் எடுக்கும் முகாம் நடந்தது.
பூஞ்ச்சில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் நடந்த இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட முகமது ஜமீல் என்ற இளைஞர் கூறுகையில், இந்த முகாமை ஏற்பாடு செய்த இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டில் ஆறு மாதம் வேலை கிடைக்கும். நாங்கள் எல்லைக் கட்டுப்பட்டு கோடு அருகே வசிக்கிறோம். பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் தைரியத்துடன் எல்லையில் வாழ்ந்து வருகிறோம். வீரர்களுக்கு ஆதரவு வழங்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறோம் என்றார்,
நஷீர் கான் என்ற மற்றொரு இளைஞர் கூறுகையில், இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பகுதியில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்து ஏழைகளுக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து வேலைவாய்ப்பு முகாம்களும் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்றார்.