sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெ., நகைகள், புடவைகளை ஒப்படைக்கக்கோரி தீபக், தீபா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

/

ஜெ., நகைகள், புடவைகளை ஒப்படைக்கக்கோரி தீபக், தீபா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ஜெ., நகைகள், புடவைகளை ஒப்படைக்கக்கோரி தீபக், தீபா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ஜெ., நகைகள், புடவைகளை ஒப்படைக்கக்கோரி தீபக், தீபா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

1


ADDED : ஜன 14, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:36 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, அவரது சகோதரர் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டது.

28 கிலோ தங்கம்

ஆனால், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 28 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், 700 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், நகைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள், 11,340 பட்டுப் புடவைகள், 250 சால்வைகள், 12 குளிர்சாதன பெட்டிகள், 10 'டிவி'க்கள், 1.93 லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்தப் பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன.

ஜெயலலிதாவின் இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி மோகன், ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக அரசு எடுத்துச் செல்லும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயகுமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர், 'நாங்கள் இருவரும் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள்.

'இதனால், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், பிற பொருட்களை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி ஸ்ரீஷானந்தா விசாரித்து வந்தார். அரசு சார்பில் கிரண் ஜவளி, தீபக், தீபா ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் சத்யகுமார், சதீஷ்குமார், உதய் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். நேற்றும் மனு மீது விசாரணை நடந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடுகையில், 'சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா, விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்; உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

'இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு பின் அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டது. இதனால், அவரை குற்றவாளியாகக் கருத முடியாது. அவரது சொத்துக்களை வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று வாதிட்டனர்.

ஆஜராகவில்லை

அரசு வழக்கறிஞர் கிரண் ஜவளி வாதாடுகையில், ''ஜெயலலிதாவின் உடைமைகள் பறிமுதல் செய்ததை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அவரது மரணம் காரணமாக, அவருக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

''ஆனால், விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார். மேலும் சில வாதங்களையும் அவர் முன் வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

விண்ணப்பதாரர்கள் ஜெயலலிதாவின் வாரிசாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட, அவர்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இதனால், மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, அரசு வழக்கறிஞர் கிரண் ஜவளி கூறுகையில், ''ஜெயலலிதாவின் உறவினர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

''ஜெயலலிதா சட்ட விரோதமாக சம்பாதித்த நகைகள் மற்றும் அசையா சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் தொடரும். ஜெயலலிதாவின் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு, கர்நாடகாவுக்கு 5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us