ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு
ADDED : ஜன 02, 2026 01:45 AM
விருதுநகர்: ''தமிழகத்தில் பணிபுரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை சம்பளம் வழங்க வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்,'' என, விருதுநகரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.ரவி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 11 ஆயிரத்து 100 என்ற மிக குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே எங்கள் நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கப் படுகிறது. தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.19 ஆயிரம் அடிப்படை தொகை வாங்கும் நிலைக்கு தகுதியாக உள்ளோம். எனவே தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
இதுகுறித்து நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காட்டி எங்களுக்கு கொடுத்தால் அவர்கள் கேட்பர் எனக்கூறி வருகின்றனர். தற்போது ரூ.11 ஆயிரத்து 100 வாங்கும் எங்களை அரசு அட்டவணையில் வைத்து விட்டால் எங்களுக்கு 8 வது ஊதிய குழுவில் எந்த அரசு வருகிறதோ அவர்களே செலவு செய்வர். இதை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.

