sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

/

ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

ஜெகபர் அலி கொலை வழக்கு: உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

7


ADDED : ஜன 30, 2025 05:05 PM

Google News

ADDED : ஜன 30, 2025 05:05 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை விவகாரத்தில், உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கவும், அதை வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார்.

போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.

மாநில அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெகபர் அலியின் மனைவி மரியம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியதாவது:

சுற்றுச்சூழல் ஆர்வலரான என்னுடைய கணவர் கடந்த 17ம் தேதி மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது டிப்பர் லாரியால் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகார் பதிவு செய்ய தயக்கம் காட்டினார்கள். சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த கணவரின் உடல் ஜனவரி 18ம் தேதி மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்டாலும் அறிக்கை தரப்படவில்லை. உடற்கூராய்வு சான்றிதழ் பத்து நாட்களுக்குப் பின் வழங்கப்பட்டது. உடற்கூராய்வு உரிய முறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உடற்கூராய்வு செய்த மருத்துவர் ஆஜராகி லாரி ஏற்பட்டதில் எலும்பு முறிவுகள், உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயம் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார். எக்ஸ்ரே எடுக்க வேண்டியது அவசியம். கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி நிர்மல்குமார், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்ரேவிற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ஜெகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us