தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் மறுப்பு

ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் மறுப்பு

ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் மறுப்பு


ADDED : ஜூன் 28, 2025 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. ஜெகன் மூர்த்தி தரப்பு வழக்கறிஞர், 'கடத்தல் சம்பவத்திற்கும், ஜெகன் மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன், வழக்கில் போலீசார் அவரை சேர்த்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, வாதிட்டார்.

'இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், ஜெகன் மூர்த்தியும் சந்தித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது, ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெகன் மூர்த்திக்கும், ஏ.டி.ஜி.பி., ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது' என, போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், மொபைல் போன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளதற்கான ஆரம்ப முகாந்திரங்கள் உள்ளன' என கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us