தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


UPDATED : ஜன 08, 2014 12:58 AM

ADDED : ஜன 08, 2014 12:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2014 12:58 AM ADDED : ஜன 08, 2014 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'இலங்கை கடற்படையால், சிறை பிடிக்கப்பட்ட, 275 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான, 84 படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:சமீப காலமாக, கடலோரப் பகுதிகளில், கட்டு மரத்தில் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால், மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இம்மாதம், 2ம் தேதி, ஐந்து இயந்திரப் படகுகளில் சென்ற, ராமநாதபுரம் மீனவர்கள், மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்த போது, இலங்கை கடற்படை, அவர்களை பிடித்து சென்றது.இவ்வாறு கடத்தி செல்லப்பட்ட, 250 தமிழக மீனவர், இலங்கை சிறையில் அடைபட்டுள்ளனர். அவர்களின், 79 மீன்பிடி படகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, இலங்கை ராணுவத்தினர், சேதப்படுத்தி விட்டனர்.

பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்க செல்லும், ஆயுதம் இல்லாத, அப்பாவி தமிழக மீனவர்களை, தினமும், இலங்கை கடற்படை விரட்டியபடி உள்ளது. இதன்மூலம், பாக் ஜலசந்தியில், இலங்கை கடற்படை, தன் ஆதிக்கத்தை, நிலை நாட்ட முயல்கிறது.

எனவே, தாங்கள் தனிப்பட்ட முறையில், இப்பிரச்னையில் தலையிட்டு, தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தி, 275 தமிழக மீனவர்களையும் மீட்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; 84 படகுகளையும் மீட்டு தர வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us