sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெயேந்திரர் நினைவலைகள்: வெளியிட்டார் விஜயேந்திரர்

/

ஜெயேந்திரர் நினைவலைகள்: வெளியிட்டார் விஜயேந்திரர்

ஜெயேந்திரர் நினைவலைகள்: வெளியிட்டார் விஜயேந்திரர்

ஜெயேந்திரர் நினைவலைகள்: வெளியிட்டார் விஜயேந்திரர்

1


ADDED : அக் 23, 2024 05:36 PM

Google News

ADDED : அக் 23, 2024 05:36 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: தாமரை பிரதர்ஸ் மீடியாவின் (Thamarai Brothers Media) புதிய தயாரிப்பான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவலைகள் என்ற நுாலை, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பதி ஸ்ரீசங்கர மடத்தில் வெளியிட்டார். அந்த நிகழ்வின்போது நூலாசிரியர் பி.சுவாமிநாதன் உடன் இருந்தார். இந்த புத்தகத்தில் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பல்வேறு அறிவுரைகள் குறிப்பிடப்படடுள்ளன.

உதாரணமாக மன அமைதியை நாடி உலகம் முழுவதும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மும்முரமான வாழ்க்கைக்கு நடுவில் அதை அடைய இன்று பலரும் வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக அவர் ஒரு பத்து அம்சத் திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இதைப் பின்பற்றினால், மன அமைதியும், நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும் என்பது திண்ணம்.

குருவின் அனுக்ரஹத்தால் ஒருவர் கடவுளை மனத்தில் இருத்திக் கொள்ள முடியும். அப்போதுதான் உண்மையான மன அமைதியும் நிலையான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

நாம் சுயராஜ்யம் பெற்ற பிறகு, நம்முடைய வாழ்க்கை முறைகள் பெரிதும் மாறுதல் அடைந்து விட்டன. நமது சன்மார்க்க வாழ்க்கையில், இதற்கு முந்தி இல்லாத அளவுக்குக் கறை படிந்து வருகிறது.

நமது வாழ்க்கையில் எளிமைக்குப் பதில் பகட்டே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பணக்காரர்கள் சிலர் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதன் மூலமாகவும் தங்கள் செல்வச் செழுமையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதன் மூலமாகவும், ஏழைகளுக்குத் தவறான முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

இது போன்ற பல வாழ்க்கைக்கு வழி காட்டும் ஸ்வாமிகளின் நினைவலைகள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

புத்தகம் வாங்க, கட்டணமில்லா தொலைபேசி 1800 425 7700 மற்றும் வாட்ஸாப் 75500 09565 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us