கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கிராமுக்கு ரூ.7,000 ஆக உயர்வு
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கிராமுக்கு ரூ.7,000 ஆக உயர்வு
ADDED : நவ 25, 2025 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்துக்கு வழங்கப்படும் கடன் தொகை, 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்திற்கு கடன் வழங்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்துக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 92,000 ரூபாயாக உள்ளது.
இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் 1 கிராம் தங்கத்துக்கு வழங்கப்படும் கடன் தொகை, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், இந்த நிதியாண்டின் ஏப்., முதல் அக்., வரை, 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

