/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : நவ 25, 2025 02:38 AM
சேலம், ஒடிசா, ஆந்திராவில் இருந்து தமிழகம், கேரளாவிற்கு ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் ரயில்வே தனிப்படை போலீசார் எஸ்.எஸ்.ஐ., அய்யாசாமி தலைமையில், நேற்று காலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது, ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
அப்போது இன்ஜினுக்கு அடுத்துள்ள முன்பதிவில்லா பொது பெட்டியில், பயணிகள் உட்காரும் சீட்டுக்கு அடியில், கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன. அதை திறந்து பார்த்த போது, 13 பிளாஸ்டிக் பார்சல்களில், 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 17 கிலோ கஞ்சாவை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

