ADDED : அக் 30, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டு வாசலை பெருக்கிய
பெண்ணிடம் நகை பறிப்பு
ஈரோடு, அக். 30-
அறச்சலுாரை அடுத்த கொலாங்காட்டு வலசை சேர்ந்த பொன்னுசாமி மனைவி பாப்பாத்தி, 60; நேற்று காலை, 5:50 மணியளவில் வீட்டு வாசலை பெருக்கி கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் அதிவேகமாக வந்த இருவர், பாப்பாத்தி அணிந்திருந்த, 5.5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
சங்கிலியை இறுக்கமாக பற்றிய நிலையிலும், 4.5 பவுன் நகை கொள்ளையர் கையில் சிக்கி விட்டது. நகையை பறித்த இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். நகை பறித்தபோது தள்ளி விட்டதில், பாப்பாத்தியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் புகாரின்படி அறச்சலுார் போலீசார், நகை பறித்த கொள்ளையரை தேடி வருகின்றனர்.