காரைக்காலில் ஜிப்மர்: பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு
காரைக்காலில் ஜிப்மர்: பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு
ADDED : பிப் 26, 2024 12:21 AM
புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியை பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:
ஜிப்மரால் பயனடையும் 1.40 லட்சம் நோயாளிகளில், 70,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுற்றியுள்ள மாநில மக்களுக்கும், ஜிப்மர் மருத்துவமனை உதவி வருகிறது. காரைக்கால் போன்ற பகுதியில் இவ்வளவு வசதியோடு சுமார், 450 கோடி ரூபாய் செலவில் இவ்வளவு கட்டமைப்போடு, மருத்துவமனை கிடைத்திருப்பது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியை பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:
ஜிப்மரால் பயனடையும் 1.40 லட்சம் நோயாளிகளில், 70,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுற்றியுள்ள மாநிலங்களுக்கும், ஜிப்மர் மருத்துவமனை உதவி வருகிறது. காரைக்கால் போன்ற பகுதியில் இவ்வளவு வசதியோடு சுமார், 450 கோடி ரூபாய் செலவில் இவ்வளவு கட்டமைப்போடு, மருத்துவமனை கிடைத்தது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.