ADDED : ஜன 09, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :  'ஐக்கிய அரபு அமீரகத்தின், ஷார்ஜா நகரில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
ஷார்ஜாவில், சந்தை பொறியாளர், புரொடக் ஷன் இன்ஜினியர், மிஷின் ஆப்பரேட்டர், கனரக பஸ் ஓட்டுநர் என பல்வேறு பணிகளுக்கு, ஆட்கள் தேவைப்படுகின்றனர்.ஆறு ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நேர்காணல் வரும் 22ம் தேதி, சென்னையில் நடக்க உள்ளது. மேலும் விபரங்களை, www.omcmanpower.tn.gov.in இணைய தளத்திலும், 044- 22505567, 9566239685 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

