தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திருவாரூர், பெரம்பலுாரில் இணை ஆணையர் அலுவலகம்

 திருவாரூர், பெரம்பலுாரில் இணை ஆணையர் அலுவலகம்

 திருவாரூர், பெரம்பலுாரில் இணை ஆணையர் அலுவலகம்


ADDED : மார் 06, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறையில், திருவாரூர், பெரம்பலுார் மாவட்டங்களில், புதிய இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஏராளமான கோவில்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில், 999 கோவில்கள், திருவாரூர் மாவட்டத்தில், 2,084 கோவில்கள் உள்ளன.

இவை அனைத்தும், நாகை மாவட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

அதேபோல், திருச்சி இணை ஆணையர் அலுவலகம் கட்டுப்பாட்டில், திருச்சி மற்றும் பெரம்பலுார் மாவட்ட கோவில்கள் இயங்கி வருகின்றன.

அதிக எண்ணிக்கையிலான கோவில்கள் இருப்பதால், திருவாரூர், பெரம்பலுார் மாவட்டத்திற்கு, தனி இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என, துறை கமிஷனர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதை ஏற்று, திருவாரூர் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில், புதிதாக இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்த அனுமதி அளித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது .

இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையர், மேலாளர், தட்டச்சர் உட்பட, ஒன்பது பணியிடங்கள் என, இரண்டு இணை ஆணையர் அலுவலகத்துக்கு, 18 பணியிடங்கள் ஏற்படுத்த, ஒரு கோடியே, 84 லட்சத்து 24,360 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us