/
செய்திகள்
/
தமிழகம்
/
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்புக்கு தமிழக-, கேரள அரசுகளின் கூட்டு வழிகாட்டுதல் - தேக்கடியில் தேனி-, இடுக்கி கலெக்டர்கள் கூட்டத்தில் முடிவு

ADDED : நவ 13, 2024 06:36 AM

கூடலுார் : 'சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பிற்கு தமிழக, கேரள அரசுகளின் கூட்டு வழிகாட்டுதல்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என, தேக்கடியில் நடந்த தேனி, இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நவ.,16ல் துவங்க உள்ள நிலையில் நவ.,15 மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வருவர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தேனி கலெக்டர் சஜீவனா, இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி தலைமையில் தேக்கடி ராஜீவ் காந்தி அறிவியல் மையத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
தயார் நிலையில் மருத்துவ குழுக்கள்:கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் தமிழக கேரள அரசுகளின் கூட்டு வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்படும். கோவில் வரை உள்ள வழித்தடங்கள் முழுதும் தனித்தனியாக போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ரோந்து செல்ல தனி குழு அமைக்கப்படுகிறது.
முக்கிய இடங்களில் மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் பாட்டில்கள் முழுமையாக தவிர்த்து பசுமை யாத்திரையை ஊக்குவிக்கப்படும். ஆங்காங்கே கட்டுப்பாடு அறைகள் திறக்கப்படும்.போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் ஒருவழிப்பாதை அறிமுகப்படுத்தப்படும். வண்டிப்பெரியாறு, குமுளியில் அவசர சிகிச்சை பிரிவும், சிறப்பு ஆக்சிஜன் வினியோகப் பிரிவும் துவக்கப்படும்.
பம்பையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தற்காலிக கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கப்படும். சத்திரம், வல்லக்கடவு வனப்பாதையில் அதிகாலை 5:00 மணியிலிருந்து மதியம் 3:00 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இடுக்கி எஸ்.பி., விஷ்ணு பிரதீப், தேனி எஸ்.பி., சிவப்பிரசாத் உள்ளிட்ட இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.