ADDED : மே 28, 2026 02:12 AM
சென்னை: ஜோஸ் ஆலுக்காஸ், 'தங்க மாற்று' என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.
'உங்களுக்கு பிடித்ததை அணியுங்கள்; இந்தியாவின் பெருமையாக திகழுங்கள்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஜோஸ் ஆலுக்காஸின், 60க்கும் மேற்பட்ட கிளைகளில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை மாற்றும் போது, ஒவ்வொரு சவரனுக்கும் கூடுதலாக, 2,000 ரூபாய் வரை, அதிக தொகையை பெறுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க நகைகளின் செய்கூலியில், 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இது குறித்து, ஜோஸ் ஆலுக்காஸ் மேலாண் இயக்குநர் பால் ஆலுக்காஸ் கூறியதாவது:
தேசத்தின் மீதான பற்றையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதோடு, தற்போதைய காலகட்டத்தின் யதார்த்தமான தேவையாகவும், இது இருக்கிறது. உலகில் அதிக தங்கம் வைத்துள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று.
புதிதாக தங்கத்தை இறக்குமதி செய்வதையே நம்பி இருக்காமல், நம் நாட்டிற்கு உள்ளேயே, கோடிக்கணக்கான குடும்பங்களில், ஏற்கனவே இருக்கும் தங்க நகைகளை, சிறப்பாக பயன்படுத்துவது, வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.
இதனால், இதை ஊக்குவிக்கிறோம். வாடிக்கையாளர் கள் தங்களின் பழைய தங்கத்தை, மறு சுழற்சி செய்யவும், பயன்படுத்தாத நகைகளை, மாற்றிக் கொள்ளவும், வீட்டில் முடங்கி கிடக்கும் தங்கத்தை, மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரவும், நாங்கள் மக்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
