சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2025 09:33 PM

சென்னை: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், பத்திரிகையாளர்களை மிரட்டுவதாகவும், அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கையை கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பத்திரிக்கையாளர்கள், 'விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து; பறிமுதல் செய்த செல்போன்களை உடனே திரும்பக் கொடு' என்ற பதாகையை ஏந்தியபடி கோஷமிட்டனர்.